ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் அவரது குடும்ப உறுப்பினர் தான் ஹீரோவா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் அவரது குடும்ப உறுப்பினர் தான் ஹீரோவா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ’3’ மற்றும் ’வை ராஜா வை’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து இருந்த நிலையில் தற்போது அவர் இயக்கும் பாலிவுட் படத்திலும் அவரது குடும்ப உறுப்பினர் தான் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும், 'ஓ சாதிசால்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது

ஐஸ்வர்யாவின் சகோதரி சௌந்தர்யாவின் கணவர் விசாகன் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சௌந்தர்யா ரஜினியின் கணவர் விசாகன் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES