பீஸ்ட் திரை விமர்சனம்

பீஸ்ட் திரை விமர்சனம்

நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் 3வதாக இயக்கும் படம் இது. ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்த்த இப்படம் எப்படி உள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

கதைக்களம்

காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போட்டுள்ளார் வீர ராகவன் விஜய், ஆனால் அதை கைவிடும்படி உத்தரவு வர அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார் விஜய்.

எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. இதனால் விஜய் சென்னைக்கு வர அங்கு பூஜாவுடன் காதல் வயப்படுகின்றார்.

ஒரே வேலையில் பூஜாவுடன் சுற்றி வரும் வீரா ராகவன் வேலை சம்மந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள மக்களை சிறை பிடிக்கின்றனர். வீர ராகவனால் கைதான அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க கோரிக்கை வைகின்றனர். அந்த மாலில் உள்ளவர்களை விஜய் காப்பற்றினாரா, தீவிரவாதியை கொன்றாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

வீர ராகவானாக தனது அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் விஜய். படம்  தொடங்கியது முதல், முடிவு வரை வீர ராகவானாக அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றார் தளபதி விஜய். மேலும் பூஜா, VTV கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

யோகி பாபு, Redin Kingsley- க்கு அதிகமான காட்சிகள் இல்லை, மத்த கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. படத்தில் தீவரவாதிகளை ரொம்பவே Weak-ஆக காண்பித்துள்ளார்கள், இதனால் விஜய் போடும் திட்டங்களை பார்க்கும் நமக்கு படத்தின் மீதான விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. முதல் பாதி காமெடி ஆக்ஷன் என நெல்சன் ஸ்டைலில் உள்ள பீஸ்ட் இரண்டாம் பாதியில் சலிப்புதட்டும் வகையில் உள்ளது.

 

டாக்டர், KoKo உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கியுள்ள நெல்சன் எமற்றத்தை அளித்துள்ளார். அனிருத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர், ஆனால் BGM-யை தேட வேண்டியதாக உள்ளது. மனோஜ் பரமஹாசவின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பிளஸ். இரண்டாம் பாதியில் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளில் VFX சலிப்பு தட்டுகிறது.

 

அன்பறிவின் ஸ்டண்ட்ஸ் ஓகே. பொதுவான விஜய் படங்களில் இருந்து பீஸ்ட் வித்தியசமாக இருந்தாலும் பெரியளவில் நம்மை திருப்தி செய்யவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.

கிளாப்ஸ்

விஜய்யின் நடிப்பு

ஒளிப்பதிவு

காமெடி காட்சிகள்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி

சலிப்பு தட்டும் சண்டை காட்சி

மொத்தத்தில்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பெரியளவிலான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்று தான் கூறவேண்டும்.   

LATEST News

Trending News

HOT GALLERIES