'நானே வருவேன்' படக்குழுவில் இருந்து பிரிந்தார் நாயகி: வைரல் புகைப்படம்!

'நானே வருவேன்' படக்குழுவில் இருந்து பிரிந்தார் நாயகி: வைரல் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் குழுவிலிருந்து விடைபெற்று கொள்வதாக நாயகி எல்லி அவ்ரம் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக கிரேக்க நடிகை எல்லி அவ்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது பகுதி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று உடன் தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் ’நானே வருவேன்’ குழுவில் இருந்து விடைபெற்று கொள்வதாகவும் எல்லி அவ்ரம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எனது சக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் திறமையான இயக்குனர் செல்வராகவன் ஆகியோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செல்வராகவன், தனுஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News