என் படம் டிராப் ஆனதுக்கு மோடி தான் காரணம்: நடிகர் ஆரி
தன்னுடைய படம் தொடங்கப்படாமல் டிராப் ஆனதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என நடிகர் ஆரி, திரைப்பட விழா ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி, சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’நலிந்த தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்காக நான் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்த தர தயார் என்று கூறினார்

மேலும் நானும் ஒரு முன்னணி தயாரிப்பாளரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றிய இருந்தோம் என்றும், ஆனால் அந்த நேரத்தில் திடீரென பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்ததால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது என்றும் அந்த படத்தின் டிராப்புக்கு மோடி தான் காரணம் என்றும் ஆரி கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.