ரோல்ஸ்ராய் கார் வழக்கில் அதிரடி தீர்ப்பு: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை விஜய் இறக்குமதி செய்த நிலையில் அந்த காருக்கு வரிவிலக்கு வேண்டும் என விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனிநீதிபதி, விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்தும் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை நீக்கவும் கோரி விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த தீர்ப்பில் நடிகர் விஜய் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என கூற முடியாது என்பதால் அவருக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றது என்று உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் நீதித்துறையின் உண்மையான பலம் என்பது மக்களின் நம்பிக்கையே தவிர நீதிமன்ற அவமதிப்பு ஒருவரை தண்டிப்பது அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து விஜய் குறித்து தனிநீதிபதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.