மலையாள ரீமேக் படத்தில் கதாநாயகனாக யோகி பாபு!
நடிகர் யோகி பாபு நகைச்சுவை பாத்திரங்கள் மட்டுமில்லாமல் கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாள இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் ஒரு காமெடி பேண்டசி திரைப்படமாக உருவாக உள்ளதாம். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்துள்ளது.