முதல் பட ஆடியோ விழாவில் திமிர் பேச்சு: அஸ்வினை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
முதல் பட ஆடியோ விழாவில் திமிர் பேச்சு: அஸ்வினை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அஸ்வின் தற்போது ’என்ன சொல்லப்போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடைபெற்றபோது அஸ்வின் பேசிய திமிர் பேச்சு காரணமாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்
இந்த ஆடியோ விழாவில் நான் அழகாக இருக்கிறேன் என்றும் நன்றாக நடிப்பேன் என்றும் அவரே தன்னைத்தானே உயர்த்தி பேசிக்கொண்டு பேசினார். மேலும் தன்னிடம் 40 இயக்குனர்கள் கதை சொல்ல வந்தார்கள் என்றும் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார்
முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது