KGF 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்!

KGF 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்!

கேஜிஎஃப் சாப்டர் 2  படத்தில் அதீராவாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது டப்பிங்கை முடித்துள்ளார். 

 

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் பாகம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கேஜிஎஃப் சாப்ட்டர் 2 ரிலீஸ் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அதீராவாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது டப்பிங்கை முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமுக பலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

LATEST News

Trending News