பாலாவிடம் சூர்யா போட்ட ஒப்பந்தம்! நடக்குற காரியமா பாஸ்?

பாலாவிடம் சூர்யா போட்ட ஒப்பந்தம்! நடக்குற காரியமா பாஸ்?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படம் பொங்கலுக்குப் பிறகு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.
 

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்துக்கான வேலைகள் இப்போது பிஸியாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்துக்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இயக்குனர் விஜி பெற்றுள்ளாராம்.
 

இந்த படத்தை மூன்று மாதத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கியுள்ளார்களாம். ஏனென்றால் பாலாவின் வரலாறு ஒவ்வொரு படத்தையும் 2 வருடம் வரை ஜவ்வா இழுத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆக்கிவிடுவார். ஆனால் அவர் தயாரிக்கும் படங்களை மட்டும் குறுகிய காலத்தில் இயக்கி முடிப்பார் என்று திரைத்துறையில் அவர் மேல் புகார் உண்டு.

LATEST News

Trending News

HOT GALLERIES