மாநாடு படம் வெற்றி - யுவன் சங்கர் ராஜா அறிக்கை
மாநாடு பட வெற்றி குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாநாடு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், மாநாடு படத்தின் நடிகர் சிம்புவின் நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், மாநாடு பட வெற்றி குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என் நண்பர் மற்றும் சகோதரருமான சிம்பு மாநாடு படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புக்காகவும் உழைப்புக்காகவும் நான் பெருமைப்படுகிறேன். அவரது உழைப்பிற்கு அனைத்துத் தரப்பிலும் இருந்து பாராட்டு வருவதைக் கண்டு மகிழ்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு படத்தின் எனது பிஜிஎம் இசை நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இதற்காக நான் தயாரிப்பாளார் சுரேஷ்காமாட்சிக்கு, நடிகர் சிம்புக்கும், இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் நன்றி கூறுகிறேன். இப்படத்தை தூண்போன்று தாங்கியுள்ளது எ.ஜே.சூர்யாவின் நடிப்புதான். இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
Thank you note from @thisisysr @U1Records @DoneChannel1 pic.twitter.com/04A2e8BzRu
— Ramesh Bala (@rameshlaus) December 1, 2021