மீண்டும் தொடங்குகிறதா சங்கமித்ரா திரைப்படம்?

மீண்டும் தொடங்குகிறதா சங்கமித்ரா திரைப்படம்?

சங்கமித்ரா திரைப்படத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
 

 

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’ ஆர்யா ஜெயம்ரவி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்தது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட பாகுபலி அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அதன் அறிவிப்புகள் இருந்தன.
 

ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் காரணமாக படம் தொடங்காமலேயே நின்றுபோனது. இந்நிலையில் இப்போது சில பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

LATEST News

Trending News