"BiggBoss-ஏ பாக்கலனு சொல்லிட்டு Homework பண்ணிட்டு வந்துருக்காங்க".. 2வது Elimination-ஐ அறிவித்த கமல்!

"BiggBoss-ஏ பாக்கலனு சொல்லிட்டு Homework பண்ணிட்டு வந்துருக்காங்க".. 2வது Elimination-ஐ அறிவித்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் முதலாவதாக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் இணைந்த 18 பேரில் நமீதா மாரிமுத்து வெளியேறியதை அடுத்து 17 பேர் போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தனர்.

அதன் பிறகு முதல் ஆளாக அதிகாரப்பூர்வ நாமினேஷன் லிஸ்டின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து நாடியா வெளியேற்றப்பட்டார். அவர் மீது ரசிகர்கள் மற்றும் கமல்ஹாசன் உட்பட பலரும் பாசிட்டிவான கருத்துக்களை முன்வைத்தனர். அவரும் இதை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

இதனைத் தொடர்ந்து அடுத்த எலிமினேஷன் நடந்துள்ளது. முன்னதாக பேசிய கமல்ஹாசன், “வழக்கமாக பாதிக் கிணறு தாண்டும்போது நடக்கும் சில சம்பவங்கள், இந்த சீசன் பிக்பாஸில் எடுத்த எடுப்பிலேயே நடக்கின்றன. சதித்திட்டங்கள் போடுதல், குழு குழுவாக பிரிதல், இரண்டு குழுக்களுக்கும் தூது போவது போல் திட்டங்களை பரிமாற்றம் செய்தல் உள்ளிட்டவை தாமதமாக நடக்கும்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

உள்ளிருக்கும் சிலரை கேள்வி கேட்டபோது, பிக்பாஸை நான் பார்க்கவே இல்லை என்று சொல்லி துண்டை போட்டு தாண்டினார்கள். ஆனால் இவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, உட்கார்ந்து ஹோம் ஒர்க் பண்ணி, நோட்ஸ் எடுத்து, ரிசர்ச் பண்ணி இந்த சதிகளில் அதிக அனுபவம் உள்ள பெரியவர்களிடம் அட்வைஸ் கேட்டு வந்து இருப்பார்களோ என்று எனக்கு தோன்றுகிறது!” என்று குறிப்பிட்டிருந்தார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

மேலும் பல கதாபாத்திரங்களாக நடிப்பதுடன், அனைத்தும் வில்லன் பாத்திரமாகவே இருப்பதை பார்ப்பவர்கள் ரசிப்பார்களா என்கிற அந்த ஹோம் ஒர்க்கை பயிற்சி பண்ணாமல் வந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். அனுபவிக்க வைப்பீர்கள்!” என்று ஆடியன்ஸை பார்த்து குறிப்பிட்டிருந்தார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

இந்நிலையில் நாமினேஷன் லிஸ்டில் இருந்த பிரியங்கா, அபினய் சேவ் பண்ணப்பட்டார்கள் என்று கமல் முதலில் உடைத்தார். அதன் பின்னர் ஐக்கி, அபிஷேக், சின்ன பொண்ணு மூவரில் வெளியேறப் போகும் போட்டியாளர்களில் ஐக்கி போகவில்லை என்று கமல் அடுத்து கூறினார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

இதனைத் தொடர்ந்து யார் வெளியேறுகிறார்கள் என்கிற மக்கள் தீர்ப்பை சொல்லப்போவதாக கூறிய கமல், தான் மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக கூறி, அபிஷெக் பெயரை காண்பித்தார். அனைவரும் அதிர்ந்தனர். ‘சொல்லிட்டு வாங்க’ என கமல் கூற, அபிஷேக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

அப்போது பாவனி உள்ளிட்ட சில நண்பர்கள் அவருக்கு காயின் கொடுத்து காப்பாற்றுவதாக கூற, அபிஷேக்கோ, “இல்லை.. இல்லை.. இது மக்கள் தீர்ப்பு. நான் காப்பாற்றப்படுவதை நான் விரும்பவில்லை. காயினை விட நான் என்னை நம்புகிறேன். மக்கள் நான் இருக்கக் கூடாது என விரும்புகிறார்கள். அதை மதிக்க வேண்டும்.!” என்று கூறினார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

குறிப்பாக அபிஷேக்கை சமாதானப்படுத்த முயற்சித்த நிரூப், “அப்படி வெளியே போய்விட வேண்டும் என்றால் இந்த காயின் எதுக்கு? இந்த எலிமினேஷன்க்கும் காயினுக்கும் சம்மந்தம் உண்டு.” என்று கூறினார். பிரியங்கா அழுதேவிட்டார். அனைவரும் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது இடைமறித்த பிக்பாஸ் அந்த காயின் வாய்ப்பு கொடுக்கப்படும்போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூற, அதன் பிறகு அபிஷேக் விடைபெற்றார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

பின்னர் வெளியேவந்த அபிஷேக், தான் டாப் 5-ல் இருப்போம். நாம் நாமாகவே இருந்தாலே அது நடக்கும் என நினைத்திருந்ததாக கமலிடம் தெரிவித்திருந்தார்.

biggbosstamil5 second official elimination kamalhassan vijay tv

மேலும் மற்றவர்களை அனாலடிக் பண்ணும் விஷயத்தை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூறி, பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் வாழ்ந்த கலவையான நிகழ்வுகள் அடங்கிய குறும்படத்தை போட்டுக் காட்டினார்.

LATEST News

Trending News