சிம்புவின் 50 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ள விஜய் சேதுபதி, வெளியான செம்ம மாஸ் தகவல்..

இந்த இரண்டு படங்களையும் முடித்த பின் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பின் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு மன்மதன், வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து அவரின் 50 வது திரைப்படத்தையும் அவரே இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளாராம். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்ததது பெரிய வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES