அதிதி ஷங்கர் படப்பிடிப்பு திடீர் ரத்து: இந்த பிரபல நடிகர் காரணமா?

அதிதி ஷங்கர் படப்பிடிப்பு திடீர் ரத்து: இந்த பிரபல நடிகர் காரணமா?

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் தீபாவளி வரை நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் ’விருமன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தீபாவளி வரை நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரகாஷ்ராஜ் கொடுத்த கால்சீட்டின்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் வேறுவழியின்றி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து மோகன்பாபுவின் மகன் போட்டியிடுவதை அடுத்து இருவரும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணி காரணமாகவே ’விருமன்’ படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் கலந்து கொள்ளவில்லை என்றும் தேர்தல் முடிந்ததும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பின்னர் கண்டிப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News