நீங்க நம்பலைனாலும் இதான் நெசம்: 'சார்பாட்டா பரம்பரை' குறித்த முக்கிய அறிவிப்பு!
பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை திரையுலகினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் விரைவில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் கலைஞர் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது

கலைஞர் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் ’நீங்கள் நம்பலைனாலும் இதான் நெசம்’ என்ற அறிவிப்போடு ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளது. அனேகமாக வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.