மாபெரும் சாதனை படைத்த வலிமை.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.
மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் Glimpse கூட ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த Glimpse வீடியோ Youtube-ல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.