பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்: உறுதி செய்யப்பட்டதாக தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்: உறுதி செய்யப்பட்டதாக தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவர் என குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் நபராக கனி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கனியின் சகோதரி விஜயலட்சுமி ஏற்கனவே தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும், ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகள் இரண்டு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற கனி, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் மற்ற போட்டியாளர்கள் யார் யார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES