பொன்னியின் செல்வனை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்! வெளியான புதிய அறிவிப்பு..

பொன்னியின் செல்வனை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்! வெளியான புதிய அறிவிப்பு..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் 'புது வெள்ளம்' என்கிற பெயரில் 'பொன்னியின் செல்வன்' நாவல் வெப் சீரிஸாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் தற்போது வெப் சீரிஸாகவும் உருவாக இருப்பதால், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LATEST News

Trending News