இவரை தான் திருமணம் செய்ய போகிறேன்....! மனம் திறந்த சீரியல் நடிகை....!
மனசெல்லாம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நாயகி சந்திரா. விஜய் டிவியில் கடந்த 2007-ல் ஒளிபரப்பாகி காதலர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான், "காதலிக்க நேரமில்லை". இதில் கதாநாயகியாக நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார் இவர். இதையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும், பல திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். 38 வயதாகும் இவர் தற்போது ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். ரசிகர்கள் தொடர்ந்து சந்திரா உங்களுக்கு எப்போது திருமணம்...? என்ற கேள்வியை கேட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சந்திரா இன்ஸ்டாகிராமில் பதில் கூறியுள்ளார்.
"எங்களுடைய குடும்பங்களின் சம்மதத்துடனும், அவர்களின் ஆசிர்வாதத்துடனும் என்னுடன் சீரியலில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டியை விரைவில் திருமணம் செய்யவுள்ளேன். ரசிகர்களாகிய உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.