ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் 'சார்பாட்டா பரம்பரை': ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் 'சார்பாட்டா பரம்பரை': ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் ‘சார்பாட்டா பரம்பரை’: ரசிகர்கள் மகிழ்ச்சி

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி இயக்கத்தில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே, மேலும் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருந்தால் மிகப்பெரிய வசூல் சாதனை செய்திருக்கும் என்று பல விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் திறந்து விட்ட நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தரப்பில் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அமேசான் நிறுவனம் தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறி விட்டதால் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘சார்பாட்டா பரம்பரை படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றிருப்பதாகவும் இதற்காக அந்நிறுவனம் 7 கோடிக்கு மேல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வரும் ஆயுத பூஜை தினத்தில் கலைஞர் டிவியில் ‘சார்பாட்டா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அமேசானில் இதுவரை பார்க்காத ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

LATEST News

Trending News