கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஷிவானி நாராயணன்? யாருக்கு ஜோடி தெரியுமா?

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஷிவானி நாராயணன்? யாருக்கு ஜோடி தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் அவர் 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் பல கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானிக்கு வேறு திரைப்பட வாய்ப்புகளோ அல்லது புதிய தொலைக்காட்சி தொடர் வாய்ப்புகளோ கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ஷிவானி நாராயணன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கமலஹாசனின் ’விக்ரம்’ படத்தில் ஷிவானி நாராயணன் இணைந்து உள்ள தகவல் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள் : விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

LATEST News

Trending News