10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு திரும்பும் நடிகை: சசிகுமார் ஜோடியாகிறார்!

10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு திரும்பும் நடிகை: சசிகுமார் ஜோடியாகிறார்!

பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழ் திரையுலகிற்கு திரும்பும் நடிகை ஒருவருக்கு சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகவு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இயக்குனர் சத்யசிவா ஏற்கனவே ’கழுகு’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கரண் நடித்த ’காக்க காக்க’ அர்ஜுன் நடித்த ’வல்லக்கோட்டை’ சேரன் நடித்த ’முரண்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும்ம் பத்து ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சசிகுமார், ஹரிப்பிரியா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் விக்ராந்த், துளசி, மதுசூதனன் உள்பட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதும், இந்த படத்தை டிவிடி ராஜா என்பவர் தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News