நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி… ப்ரோமோவை வெளியிட்டு நடிகர் சூர்யா உருக்கம்!

நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி… ப்ரோமோவை வெளியிட்டு நடிகர் சூர்யா உருக்கம்!

“சின்னக் கலைவாணர்“ என அழைக்கப்பட்ட நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத இடத்தைப் பிடித்தவர். தனது நகைச்சுவை உணர்வால் மட்டுமல்ல, பகுத்தறிவு கருத்துகளாலும் சமூக அக்கறையாலும் ஒவ்வொரு தமிழர் மனங்களையும் கவர்ந்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவால் தமிழ் சினிமா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வந்தனர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு வலம்வந்த நடிகர் விவேக்கின் மறைவு சினிமா பிரபலங்கள் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் விவேக் கடைசியாக “LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்” எனும் நிகழ்ச்சியை நடிகர் சிவாவுடன் இணைந்து  தொகுத்து வழங்கி இருந்தார். கூடவே இந்த நிகழ்ச்சியின் நடுவராகவும் அவர் பணியாற்றினார். பல வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது முதல்முறையாக தமிழில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதமே இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடைய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தற்போது நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிறகு மற்றொரு ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உருக்கமான சில கருத்துகளையும் தெரிவித்து உள்ளார். அதில் “அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்வார்… நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்ந்து கொள்வது ஒரு கௌரவம். நம்மை சிரிக்க வைத்ததுடன் சமூகப் பொறுப்புள்ள மற்றும் முற்போக்கான எண்ணங்களையும் கடத்தியவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக் தொகுத்து வழங்கிய “LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்” நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர அவரது நடிப்பில் “அரண்மனை 3”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன.

LATEST News

Trending News