'சூர்யா 39' படத்தின் சூப்பர் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

'சூர்யா 39' படத்தின் சூப்பர் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் இன்ப அதிர்ச்சியாக அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நேற்று அவர் நடித்து வந்த 40வது திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று அறிவிக்கப்பட்டது என்பதும் அதனை அடுத்து நள்ளிரவில் அந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் இன்று அந்த படத்தின் மூன்றாவது லுக் வெளி வந்தது என்பதும் தெரிந்ததே.

அடுத்தடுத்து சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் போஸ்டர்கள் வெளிவந்தது சூர்யா ரசிகர்களை இன்ப அதிர்ச்சி ஆக்கி கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் நடித்துக்கொண்டிருக்கும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் ’சூர்யா 39’ படத்தின் டைட்டில் ‘ஜெய் பீம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான இந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது சூர்யா ரசிகர்களால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஞானவேல் என்பவர் இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES