ஆயுத எழுத்து சீரியல் நடிகர் ஆனந்த் செல்வனை நியாபகம் இருக்கா?- அவரின் புதிய சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. சீரியல் ஆரம்பத்தில் ஒரு நாயகன்-நாயகி நடித்தார்கள்.
பின் என்ன பிரச்சனையோ இருவருமே மாற்றப்பட்டார்கள், அவர்கள் ஏன் மாறினார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை.
புதிய நடிகர்களாக ஆனந்த் மற்றும் சரண்யா நடித்து வந்தார்கள். ஆனால் இடையில் திடீரென சீரியல் நிறுத்தப்பட்டது, ஏன் நிறுத்தினார்கள் என்பது அதில் நடித்தவர்களுக்கே தெரியவில்லை.
இந்த நிலையில் நடிகர் ஆனந்த் செல்வன் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் தான் நடிக்கிறாராம்.
சீரியலின் பூஜை போடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.