திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் சனம்ஷெட்டியின் பதில்!
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சனம்ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் உங்களது திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு அவர் விரக்தியுடன் பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சனம்ஷெட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பது தெரிந்ததே. அவர் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது நியாயமே இல்லை என பல ரசிகர்கள் குரல் கொடுத்ததே அவருக்கான வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சனம்ஷெட்டி சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது உங்களது திருமணம் எப்போது? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைப்பார் என்ற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருகிறது. என்னுடைய விஷயத்தில் அது சரியாக இருக்கிறது. என்னை ஒருவர் காதலித்தார், ஆனால் எதுவும் நடக்கவில்லை, ஒருவேளை எனக்கான நாள் வரும்போது திருமணம் நடக்கும் என்று நம்புகிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷனை சனம்ஷெட்டி காதலித்தார் என்பதும் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருமணம் நின்று விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.