செல்வராகவனின் உதவி பெண் இயக்குனர் படத்தில் யோகிபாபு?

செல்வராகவனின் உதவி பெண் இயக்குனர் படத்தில் யோகிபாபு?

செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் அறிமுகமாகும் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும் பிஸியான நடிகர் யோகிபாபு. இடையிடையே அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் வித்தியாசமான இயக்குனர் செல்வராகவனின் பெண் உதவி இயக்குனர் லதா என்பவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த அவரது மனைவி கீதாஞ்சலி ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் தற்போது இன்னொரு பெண் உதவி இயக்குனர் படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES