பிக்பாஸ் சீசன் 5-ல் செய்யப்படவுள்ள அதிரடி மாற்றங்கள், இதெல்லாம் இருக்காதா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.பெரிய ரசிகர்கள் கூட்டம் உடைய இந்த நிகழ்ச்சியில் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கடைசியாக நடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனில் சில அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4 சீசன்களிலும் ஒரே மாதிரியான டாஸ்க்குகள் இடம்பெற்ற நிலையில், 5-வது சீசனில் புதுவிதமான டாஸ்க்குகளை கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் கடந்த சீசனில் தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தனர்.
எனவே 5-வது சீசனில் அதிகளவில் சினிமா பிரபலங்களை களமிறக்க உள்ளார்களாம். மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கான பட்ஜெட்டும் அதிகம் என கூறப்படுகிறது.