பெண் குழந்தைக்கு அம்மாவானார் விஜய்டிவி சீரியல் நடிகை: வாழ்த்தும் பிரபலங்கள்

பெண் குழந்தைக்கு அம்மாவானார் விஜய்டிவி சீரியல் நடிகை: வாழ்த்தும் பிரபலங்கள்

விஜய் டிவி உள்பட பல டிவி சீரியல்களில் நடித்தவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை ஸ்ரீதேவி அசோக் பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்

தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’கஸ்தூரி’ ’இளவரசி’ ’தங்கம்’ போன்ற தொடர்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ தொடரிலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மானாட மயிலாட’ என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார். கர்ப்பமான நேரத்தில் கணவருடன் போட்டோ ஷூட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து சின்னத் திரை உலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News