வனிதாவின் அதிரடி முடிவு குறித்து ஒரே வார்த்தையில் கமெண்ட் அளித்த ரம்யா கிருஷ்ணன்!
நடிகை வனிதா விஜயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விஜய் டிவியிலிருந்து தான் வெளியேறுவதாகவும், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தர்.
மேலும் பெண்களுக்கு ஆண்களால் மட்டுமின்றி பெண்களாலும் சில மோசமான அனுபவங்கள் ஏற்படுத்துகிறது என்றும், பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள் என்றும் சீனியர் ஒருவர் இப்படி நடந்து கொண்டிருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிக்பாஸ் ஜோடி’ நிகழ்ச்சியில் வனிதாவுக்கு அப்படி பிரச்சனை கொடுத்தது யார்? என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது பதிவிற்கு கீழே கமெண்ட்ஸ்களில் ஒருசிலர் இந்த நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணன் தான் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரம்யா கிருஷ்ணன், ‘பிக்பாஸ் ஜோடி படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்பது வனிதாவை கேட்டுக் கொள்ளுங்கள் என்றும், என்னை பொருத்தவரைக்கும் இது ஒரு பிரச்சனையே இல்லை என்றும், இந்த விஷயம் தொடர்பாக என்னுடைய கருத்து என்னவென்றால் ’நோ கமெண்ட்ஸ்’ என்றும் ஒரே வார்த்தையில் பதில் அளித்தார்.