நாம் இருவர் நமக்கு இருவர், ராஜபார்வை சீரியல் புகழ் ரஷ்மிகா சன் டிவியில் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?

நாம் இருவர் நமக்கு இருவர், ராஜபார்வை சீரியல் புகழ் ரஷ்மிகா சன் டிவியில் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

குடும்பம், கலாட்டா, சோதனை, பழிவாங்குதல், காதல் என எல்லாம் கலந்த கலவையாக இருந்தது. நன்றாக சீரியல் ஓடிக் கொண்டிருக்க திடீரென கொரோனா லாக் டவுன் வந்து சீரியல் அப்படியே நிறுத்தப்பட்டது.

லாக் டவுன் முடிந்தபிறகு சீரியல் தொடர்ந்து ஓடும் என்று பார்த்தால் அதே பெயரில் சில நடிகர்களை மட்டும் வைத்து வேறொரு கதையில் இப்போது புதிய சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் பாகத்தின் சீரியலில் தாமரை என்ற பெயரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரஷ்மிகா ஜெயராஜ். இவர் இப்போது விஜய்யில் ராஜபார்வை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல்களுக்கு முன் அதாவது அவர் நடித்த முதல் சீரியல் சன் தொலைக்காட்சியில் தானாம். 2017ம் ஆண்டு ஒளிபரப்பான விதி சீரியலில் தான் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES