'பிகில்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்பு?

'பிகில்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்பு?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய ’பிகில்’ திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் சிம்புவிடம் ஒரு படத்திற்காக அணுகியுள்ளதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை சிம்பு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி தரப்பினர் இடையே நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சிம்பு மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் இணையும் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் ‘பத்து தல’ படத்திலும் கௌதம் மேனன் இயக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர்தான் அவர் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏஜிஎஸ் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், கேவி ஆனந்த் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருந்ததாக செய்தி வெளியானது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக சமீபத்தில் கேவி ஆனந்த் காலமாகி விட்ட நிலையில் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News