கனா காணும் காலங்கள் சீரியல் நியாபகம் இருக்கா பேன்ஸ்- ஒரு குட் நியூஸ்

கனா காணும் காலங்கள் சீரியல் நியாபகம் இருக்கா பேன்ஸ்- ஒரு குட் நியூஸ்

விஜய் தொலைக்காட்சி அதன் நோக்கம் எல்லாமே இளைஞர்களிடம் ரீச் ஆவது தான். நீங்கள் அந்த டிவி நிகழ்ச்சியை நன்றாக பார்த்து வந்தால் தெரியும்.

அப்படி அவர்கள் 2006ம் ஆண்டு இளைஞர்களை தொலைக்காட்சி பார்க்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒளிபரப்பாகிய ஒரு சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். 

பள்ளி பருவ கதைக்களத்தில் செம ஜாலியான அதேசமயம் எதார்த்தமான கதைக்களத்தில் சீரியல் தொடர் அமைந்திருக்கும். 2006ல் சீரியலை பார்த்த அனைவருமே அந்த தொடருக்கு அடிமையாகிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகுமா என்றால் இல்லை, ஆனால் இன்னொரு தகவல் ஒன்று வந்துள்ளது.

அதாவது இந்த சீரியல் கதைக்களத்தை போலவே பள்ளி பருவத்தை வைத்து ஒரு புதிய சீரியல் உருவாக இருக்கிறதாம். இந்த புதிய சீரியலுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

LATEST News

Trending News