ரஜினி,விஜய், சூர்யாவை தொடர்ந்து நடிகை சமந்தாவிற்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா.
சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் தங்கள் படங்களுக்கு எமோஜி கிடைப்பது ஒரு பெருமையாக தமிழ் திரையுலகினரால் கருதப்படுகிறது.
அப்படி தமிழில் வெளியான ‘மெர்சல், காலா, சூரரைப் போற்று மாஸ்டர்’ ஆகிய படங்களுக்காக அந்தந்த ஹீரோக்களுக்கு டுவிட்டரில் எமோஜிக்கள் கிடைத்தன.
இதுவரையில் ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த எமோ பெருமை கிடைத்தன. தற்போது முதன்முறையாக ஒரு நடிகையான சமந்தாவுக்கும் எமோஜி கிடைத்துள்ளது.
ஆம் ஹிந்தியில் நடிகை சமந்தா நடித்து வெளியாகவுள்ள ‘தி பேமிலி மேன் 2′ வெப் தொடருக்கும் எமோஜி கிடைத்துள்ளது.
இதனை நடிகை சமந்தாவின் ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.