தனுஷின் நிஜ வாழ்க்கை பாடல் தான் 'ரகிட ரகிட' பாடலா? சந்தோஷ் நாராயணன்

தனுஷின் நிஜ வாழ்க்கை பாடல் தான் 'ரகிட ரகிட' பாடலா? சந்தோஷ் நாராயணன்

பொதுவாக மாஸ் ஹீரோக்களுக்கு அறிமுக பாடல் என்றாலே அந்த பாடலும் மாஸ் ஆகத்தான் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களுக்கு அறிமுக பாடல் கம்போஸ் செய்யும் போது அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள், சம்பவங்களும் இடம் பெறுவது போன்று பாடல்கள் அமைப்பது உண்டு.

அந்த வகையில் ‘ரகிட ரகிட’ பாடல் தனுஷின் நிஜ வாழ்க்கையை குறிப்பிடும் வகையில் இந்த பாடலை கம்போஸ் செய்து உள்ளோம் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். தனுஷிடம் உள்ள மேனரிசம் அவரது வாழ்வில் நடந்த விஷயங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த பாடலை எழுதியதால், இந்த பாடலின் வரிகளுக்கு சரியாக பொருந்தும் வகையில் கம்போஸ் செய்ததாகவும், இந்த பாடலை கேட்டவுடன் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்பட அனைவருக்கும் பிடித்துவிட்டதாகவும், நாங்கள் எதிர்பார்த்தது போலவே ரசிகர்களிடம் இருந்தும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும் இந்த பாடலை படத்தில் பார்க்கும்போது நாம் நிஜ தனுஷையே காணலாம் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.

கோவிட் நேரத்தில் அனைவரும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த பாடல் உதவியது என்று கூறலாம் என்றும், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் தான் என்று சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES