இசைப்பச்சோந்தி என்று சொல்லி கொள்வதில் எனக்கு பெருமை தான்: சந்தோஷ் நாராயணன்!

இசைப்பச்சோந்தி என்று சொல்லி கொள்வதில் எனக்கு பெருமை தான்: சந்தோஷ் நாராயணன்!

பொதுவாக பச்சோந்தி என்ற சொல் இதுவரை நெகட்டிவ் ஆகவே சமூகங்களில் பயன்படுத்தப்படும் நிலையில் முதல் முறையாக பச்சோந்தி என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

நாளை வெளியாக இருக்கும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்திற்கு இசை அமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் ’ஒரு படத்தில் நாம் இசை அமைத்து இருக்கிறோம் என்றே தெரியாமல் படத்துடன் இசை ஒன்றிப்போய் விடுவதை தான் பச்சோந்தி என்று கூறுவதுண்டு. அந்த வகையில் பச்சோந்தி என்று கூறிக்கொள்வது எனக்கு பெருமையாக தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

கலை இயக்குனர்களும் எடிட்டர்களும் தாங்கள் வேலை செய்ததே தெரியக்கூடாது என்று நினைப்பார்கள். அது போல் தான் இசையும். இசை என்பது தனியாக தெரியாமல் படத்தோடு ஒன்றி இருக்க வேண்டும், அப்பொழுதுதான் ரசிகர்கள் அதனை ரசிப்பார்கள். அந்த வகையில் படத்தோடு நான் பச்சோந்தி போல் மாறி கொள்கிறேன் என்று கூறுவதில் எனக்கு பெருமை தான் என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES