கர்ணன், ஜகமே தந்திரம் படங்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை இதுதான்: சந்தோஷ் நாராயணன்!

கர்ணன், ஜகமே தந்திரம் படங்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை இதுதான்: சந்தோஷ் நாராயணன்!

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவருடைய அடுத்த படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இதுதான் என ஒரு பாடலை குறிப்பிட்டுள்ளார். ’கர்ணன்’ படத்தில் இடம் பெற்றுள்ள மஞ்சனத்தி என்ற பாடலுக்கும் ’ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள கலரி பாடலுக்கும் ஒரே காட்சி அமைப்பு இருந்தது என்றும் இரண்டுமே ஒரு இறப்பை பற்றி குறிப்பிடுவது என்பதால் ஒரே மாதிரி பாடலாக நமக்கு தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் இரண்டு படங்களிலும் ஒரு மரணத்தை பற்றி பேசும் பாடல் என்பதால் இந்த இரண்டு படங்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த பாடல் தான் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் இந்த பாடல் இரண்டு படங்களிலும் உள்ள பாடல் வரிகள் முற்றிலும் வேறுபாடாக இருக்கும் என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜிடம் நான் இதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டேன் என்றும், முடிந்தவரை கர்ணன் படத்தின் சாயல் வராமல் பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன் என்றும் அவர் கூறினார்.

LATEST News

Trending News

HOT GALLERIES