அதர்வா படத்தில் நடிக்கும் டிக்டாக் புகழ் தபிஃக் பாட்டி!
டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த பலரும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கெத்து கிராண்ட்மா அல்லது தபிஃக் பாட்டி என்பவர் யார் என்பதை டிக்டாக் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். 72 வயதிலும் இளமையாக உள்ள கேரக்டர்களில் டிக்டாக்கில் தோன்றி அனைவரையும் அசத்துவார் என்பது அவருடன் அவருடைய பேரன் அடிக்கும் லூட்டிகள் கொண்ட வீடியோ வைரலாகும் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தபிஃக் பாட்டி நமக்கு அளித்த பேட்டியில் தான் திரைப் படத்திலும் தற்போது நடித்து வருவதாகவும் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தில் தான் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பதாக நினைத்துக் கொள்வேன் என்றும் தொலைக்காட்சியில் யாரைப் பார்த்தாலும் அவரைப் போலவே நான் இருப்பதாக எனக்குள் மனதுக்குள் கற்பனை செய்து கொள்வேன் என்றும் அந்த பேட்டியில் தபிஃக் பாட்டி கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய இந்த புகழுக்கு காரணம் என்னுடைய பேரன் தான் என்றும் என்னுடைய மகள் தான் என்னுடைய மேக்கப்மேன் என்றும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த டிக் டாக் வீடியோவில் நாங்கள் பணி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிக் டாக் மூலம் புகழ் பெற்று தற்போது திரைப்படத்திலும் நடித்து வரும் தபிஃக் பாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.