ஜகமே தந்திரம் திரைப்படம் எத்தனை மணியளவில் ரிலீஸாகிறது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.
இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 10 மில்லியன் பார்வைகளுக்கு மேல் யூடியூப்பில் கடந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் வெளியாக இன்னும் ஒரு நாளே இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் நாளை நள்ளிரவு 12.30 Netflix-ல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        