கொரோனாவுக்கு மகனை இழந்த நடிகை: தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்!

கொரோனாவுக்கு மகனை இழந்த நடிகை: தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்!

தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது

அதுமட்டுமின்றி கவிதாவின் கணவர் தசரதராஜ் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் மகனை பறிகொடுத்த சோகத்தில் இருக்கும் நடிகை கவிதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மற்றும் சின்ன திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்

நடிகை கவிதா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு, பாண்டவர் பூமி, அவள் வருவாளா, ரட்சகன், ராசி, மேட்டுக்குடி உள்பட பல திரைப்படங்களிலும் கங்கா, நந்தினி உள்பட ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES