புஷ்பா முதல் பாகம் 10 கேஜிஎப்-க்கு சமம்

புஷ்பா முதல் பாகம் 10 கேஜிஎப்-க்கு சமம்

அல்லு அர்ஜுன் தெலுங்கில் தற்போது சுகுமார் இயக்கத்தில் நடித்து வரும் படம் புஷ்பா. ஆந்திராவில் செம்மரக் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகர் பஹத் பாசில் தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என சமீபத்தில்தான் படத்தின் இயக்குனர் சுகுமார் அறிவித்தார், கிட்டத்தட்ட பான் இந்திய படமாக இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து இயக்குனர் சுகுமாரின் முன்னாள் உதவி இயக்குனர்களில் ஒருவரான புச்சி பாபு சேனா என்பவர் கிளப் ஹவுஸ் என்கிற ஆப் மீட்டிங்கில் மற்ற நட்பு இயக்குனர்களுடன் பேசும்போது ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தை தான் பார்த்து விட்டதாகவும், அது கிட்டத்தட்ட 10 கே ஜி எஃப் - க்கு சமம் என்றும் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக புஷ்பா கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதமும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமும் வேற லெவல் என்று கூறியுள்ளார். அவரது கருத்து அல்லு அர்ஜுன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாகி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES