ஹிட் பாடல்களை கொடுக்கும் இசையமைப்பாளர் டி.இமான் இத்தனை சீரியல்களின் பாடல்களை இசையமைத்துள்ளாரா?
தமிழ் சினிமாவில் இப்போது எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள்.
அதில் சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி இப்போது முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இணையாக வளர்ந்துள்ளார் டி.இமான்.
அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் பட பாடல்களை இசையமைத்ததன் மூலம் பல தமிழ் மக்களின் பேவரெட் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.
இவரது இசையில் அதிக மெலோடி பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.
இப்படி படங்களில் பாடல்கள் இசையமைத்து வரும் டி.இமான் பல ஹிட் சீரியல்களின் டைட்டில் பாடல்களை இசையமைத்துள்ளாராம். இதுவரை அவர் 21 சீரியல்களுக்கு டைட்டில் பாடல்கள் இசையமைத்துள்ளார்.
அதில் பல பாடல்கள் செம ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.