ஹிட்டாக ஓடிய அரண்மனை கிளி சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?- சீரியல் ஹீரோ கொடுத்த விளக்கம்
விஜய் தொலைக்காட்சியில் கொரோனா முதல் அலைக்கு முன் நிறைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த அரண்மனை கிளி சீரியல் நிறுத்தப்பட்டது, அந்த சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.
நன்றாக தானே ஓடியது ஏன் நிறுத்தினார்கள் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தனர். தற்போது அந்த கேள்வியை அரண்மனை கிளி சீரியல் நாயகன் தர்ஷனிடம் ஒரு ரசிகர் இன்ஸ்டாவில் கேட்டுள்ளார்.
அதற்கு தர்ஷன், கொரோனா அரண்மனைக்கு வந்து கிளியை தாக்கிவிட்டது, நோய் தொற்று காரணமாக படப்பிடிப்பு நடத்தவில்லை, எனவே சீரியல் நிறுத்தப்பட்டது. எனவே சீரியலை முடித்துவிட்டார்கள்.