பிரமாண்ட நடிகருடன் இணையும் நடிகை ராஷி கண்ணா - யார் அந்த நடிகர் தெரியுமா

பிரமாண்ட நடிகருடன் இணையும் நடிகை ராஷி கண்ணா - யார் அந்த நடிகர் தெரியுமா

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக பிரபாஸ் நடிப்பில் உருவாவிருக்கும் படத்தில் நடிகை ராஷி கண்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.      

LATEST News

Trending News

HOT GALLERIES