தோழிகளுடன் காருக்குள் டான்ஸ் ஆடும் விஜய் மகன் சஞ்சய்: வைரல் வீடியோ!

தோழிகளுடன் காருக்குள் டான்ஸ் ஆடும் விஜய் மகன் சஞ்சய்: வைரல் வீடியோ!

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சஞ்சய் காரில் சென்று கொண்டிருந்த போது எடுத்த வீடியோ ஒன்றும், தனது நண்பர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காரில் டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ள வீடியோ வைரலாகிறது. தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிற்கு சஞ்சய்யும் அவரது நண்பர்களும்ஆடுவது போன்ற சில காட்சிகளும் சாலையில் நின்று ஆடுவது போன்று சில காட்சிகளும் உள்ளன. ஜாலியாக எந்தவித இடையூறுமின்றி விஜய் மகன் சஞ்சய் அவரது நண்பர்களும் டான்ஸ் ஆடும் வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனர் அல்லது நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய வீடியோக்களும் புகைப்படங்களும் அடிக்கடி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News