நடிகை பிந்து மாதவி சன் தொலைக்காட்சியில் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும்
தமிழ், தெலுங்கு மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றிருப்பவர் நடிகை பிந்து மாதவி.
இவர் நடித்த சில படங்கள் நல்ல ரீச்சை கொடுத்துள்ளது. அதோடு இவர் தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஆரவ் 3 பேரும் நிகழ்ச்சியின் இறுதியில் நண்பர்களாக போட்ட அட்டகாசம் எல்லாம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு பிந்து மாதவி பெரிய அளவில் வலம் வருவார் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
இப்படி படங்களில் நடித்துள்ள பிந்து மாதவி சன் தொலைக்காட்சியின் மகள் என்ற சீரியலில் நடித்துள்ளாராம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் தற்போது அந்த சீரியல் பற்றி தெரிந்துகொண்டு வருகிறார்கள்.