மகராசி சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை- ரசிகர்கள் ஷாக்
சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. சன் நிறுவனத்தின் அலுவலகத்திலேயே சீரியல்களின் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது.
கடந்த சில நாட்களாக சன் தொலைக்காட்சி சீரியல்களின் நடிகர்கள் பலர் வெளியேறி வருகிறார்கள், இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் மற்றொரு நடிகை சீரியலில் இருந்து வெளியேறியதாக செய்தி வந்துள்ளது. அதாவது மகராசி சீரியலின் முக்கிய நாயகியான திவ்யா என்கிற பாரதி சீரியலில் இருந்து வெளியேறி உள்ளாராம்.
சீரியல் ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.