மீண்டும் சீரியலில் நடிக்க வந்த கண்ணான கண்ணே சீரியல் நடிகைகள்- யார் யார் பாருங்க
சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக சீரியல்களின் டிராக் கொஞ்சம் மாறியுள்ளது.
ஆனால் ஹிட் சீரியலான ரோஜாவின் கதைக்களம் எதுவும் மாறாமல் விறுவிறுப்பாக ஓடுகிறது.
சில சீரியல்களின் படப்பிடிப்பு சன் நிறுவனம் அலுவலகத்திலேயே நடத்தப்பட்டது. தற்போது கண்ணான கண்ணே சீரியல் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது இதுநாள் வரை இந்த சீரியலின் படப்பிடிப்பில் லாக் டவுன் காரணமாக சிலர் மட்டுமே கலந்துகொண்டு வந்தனர். தற்போது மீண்டும் இதில் நடித்துவந்த நடிகைகள் நடக்க தொடங்கியுள்ளனர்.
வாசுகி மற்றும் யமுனா வேடங்களில் நடிக்கும் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துள்ளனர்.