சிம்பு, தனுஷ் நாயகியின் குழந்தை புகைப்படம்: ரசிகர்கள் வாழ்த்து!
சிம்பு நடித்த ’ஒஸ்தி’ தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரிச்சா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜோ லங்கேலா என்ற தனது பள்ளி கால நண்பரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை ரிச்சா வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது மே 27-ஆம் தேதி ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘லூகா’ என்ற பெயரை ரிச்சா-ஜோ லங்கேலா தம்பதிகள் வைத்துள்ளனர்.
சமீபத்தில் ரிச்சா தனது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் ரிச்சாவின் குழந்தைக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது மகன் அவருடைய தந்தையை போல் ஆரோக்கியமாக இருப்பதாக ரிச்சா குறிப்பிட்டு உள்ளார்