'மாநாடு' சிங்கிள் எப்போது? யுவன்ஷங்கர் ராஜா தகவல்!

'மாநாடு' சிங்கிள் எப்போது? யுவன்ஷங்கர் ராஜா தகவல்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் பாஸ்ட் சிங்கிள் பாடல் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் மறைவை அடுத்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமத்தில் இருக்கும் நேரத்தில் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியீட்டு கொண்டாடுவது மனித நேயமற்ற செயல் ஆக இருக்கும் என்றும் லாக்டவுன் முடிந்தவுடன் இயல்பு நிலை திரும்பி உடன் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனவே ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News